/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
5 பேரிடம் ரூ. 3.43 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை
/
5 பேரிடம் ரூ. 3.43 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை
5 பேரிடம் ரூ. 3.43 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை
5 பேரிடம் ரூ. 3.43 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை
ADDED : ஆக 08, 2024 02:12 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 5 பேரிடம் 3.43 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நிஜாமுதீன். இவரிடம் வங்கி அதிகாரி போல பேசிய நபர் கிரெடிட் கார்டு தொகையை உயர்த்த வங்கி விபரங்களை கேட்டார். அதை கொடுத்த அடுத்த நிமிடத்தில் அவரது கணக்கில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.
அதே போல, லாஸ்பேட்டை முருகன் என்பவர் மர்ம நபரிடம் 45 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். தொடர்ந்து, புதுச்சேரியை சேர்ந்த ஹேமா என்பவர், இன்ஸ்ட்ரா கிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து டை இயந்திரத்திற்கு ஆடர் கொடுக்க 1.70 லட்சம் அனுப்பி, ஏமாந்தார்.
உப்பளம் பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவரிடம் பேசிய நபர், தொழில் தொடர்பாக பேசி, மொத்த விற்பனையாளர் என, கூறினார். அதை நம்பி அவர் 79 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். காரைக்காலை சேர்ந்த பிரியா என்பவரை தொடர்பு கொண்ட நபர், பகுதி நேர வேலை இருப்பதாக கூறினார். அதை நம்பி, 19 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.