/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
5 பேரிடம் ரூ. 59.62 லட்சம் 'அபேஸ்': மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை
/
5 பேரிடம் ரூ. 59.62 லட்சம் 'அபேஸ்': மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை
5 பேரிடம் ரூ. 59.62 லட்சம் 'அபேஸ்': மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை
5 பேரிடம் ரூ. 59.62 லட்சம் 'அபேஸ்': மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை
ADDED : ஆக 03, 2024 11:46 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு வகையில் நுாதன முறையில் 5 பேரிடம் 59.62 லட்சம் ரூபாயை மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜவேணி. இவரது வாட்ஸ் ஆப் குரூப்பில் வந்த தகவலில், பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, இருந்தது. அதை நம்பி, 35 லட்சம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.
மேலும், கோரிமேடு பகுதியை சேர்ந்த கணேஷ்மூர்த்தி என்பவரிடம் பேசிய மர்ம நபர் பங்கு சந்தையில், முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என, கூறினார். அதை நம்பி, அவர் 23.89 லட்சம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.
கொசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஷாமிலாபானு. இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார்.
அவர், 11 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். தட்டாஞ்சாவடியை சேர்ந்த ஸ்டாலின் 49 ஆயிரம் ரூபாய், காரைக்கால் திவ்யபிரசாத், 13 ஆயிரம் ரூபாய் அனுப்பி மர்ம நபர்களிடம் ஏமாந்தனர்.
அவர்கள் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம கும்பலை தேடி வடிருகின்றனர்.