ADDED : மே 30, 2026 06:20 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ. 64 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
முத்திரையர்பாளையத்தை சேர்ந்த நபரை, மொபைல் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் தன்னை வங்கி ஊழியர் என, அறிமுகப்படுத்திக்கொண்டார். பின் அவருக்கு கே.ஒய்.சி., புதுப்பிப்பிக்க வேண்டும் என, ஒரு ஆப் லிங்கை மர்ம நபர் அனுப்பினார்.
அந்த ஆப்பை ஓபன் செய்து, அதில் தனது விவரங்களை அவர் பகிர்ந்தார். பின் அவரது வங்கி கணக்கில் இருந்து, 21ஆயிரத்து 500 ரூபாய் மாயமாகியது. பிறகே தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்தது.
இதேபோல் நைனார்மண்டபத்தை சேர்ந்தவரிடம் 13 ஆயிரம், புஸ்ஸி வீதியை சேர்ந்தவரிடம் 11 ஆயிரத்து 700, லாஸ்பேட்டை சேர்ந்த பெண்ணிடம் 11 ஆயிரத்து 49, முத்தியால்பேட்டையை சேர்ந்தவரிடம் 6 ஆயிரத்து 800 ரூபாய் என, மொத்தம் 5 பேர் 64 ஆயிரத்து 497 ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளனர். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
