/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ. 2.45 லட்சம் மோசடி
/
புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ. 2.45 லட்சம் மோசடி
ADDED : மே 07, 2024 03:55 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில், 5 பேரிடம் 2.45 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர், ஹரிகரன். இவரது வங்கி கணக்கில் இருந்து மர்ம நபர்கள் 66 ரூபாயை எடுத்துள்ளனர்.
அதையடுத்து, நவீன்செல்வா என்பவர், ஸ்டிக்கர் தொடர்பாக ஆன்லைன் மூலம் விளம்பரத்தை தேடியுள்ளார்.
அதில் வந்த விளம்பர எண்ணை தொடர்பு கொண்டு, ஸ்டிக்கர் ஆர்டர் செய்வதற்கு 27 ஆயிரம் ரூபாய் முன்பணம் அனுப்பினார். ஆனால் நாட்கள் ஆகியும் பொருட்கள் வரவில்லை.
இவரை அடுத்து, அர்சனா ஆனந்த், இவரது தந்தையின் சம்பளத்தை, 3 ஆயிரத்திற்கு பதில், 30 ஆயிரம் அனுப்பி விட்டதாகவும், அதிகமாக அனுப்பிய 27 ஆயிரம் ரூபாயை அனுப்ப மர்ம நபர் பேசினார்.
இது தொடர்பாக, பல்வேறு தவணைகளில் 77 ஆயிரம் பணத்தை அனுப்பி ஏமாந்தார்.
புதுச்சேரியை சேர்ந்தவர் ைஷலஜா என்பவர் தனது உறவினருக்கு அனுப்ப வேண்டிய பணத்தை வேறு ஒரு நபரின் வங்கி கணக்கிற்கு 33 ஆயிரம் ரூபாய் அனுப்பினார். இதுவரை அனுப்பிய பணம் திரும்ப கிடைக்கவில்லை.
மேலும் தனலட்சுமி என்ற இளம்பெண்ணின் மொபைல் எண்ணிற்கு மர்ம நபர் தொடர்பு கொண்டு, குறைந்த வட்டிக்கு பணம் கடன் வழங்குவதாக கூறினார்.
அதற்கு முன்பணம் அனுப்ப வேண்டும் என கூறினார். அதை நம்பி அவர், 42 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
5 பேரும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.