ADDED : மே 30, 2024 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது இடத்தில் நின்று கத்தியை காட்டி மிரட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். நுாறடி சாலை தனியார் மது பார் வாசலில் நின்று கொண்டு அவ்வழியாக சென்றவர்களை கத்தியை காட்டி மிரட்டிய இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள், பாவணார் நகரை சேர்ந்த கார்த்தி, 23; குரு,23; என தெரியவந்தது. இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
அதேபோல், திலாசு பேட்டை அருகே கத்தி யுடன் சுற்றிய திலாசுபேட்டை விக்கி, 20; ரஞ்சித், 19; கோரிமேடு சிவா, 21 ஆகியோரை டி.நகர், போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.