தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் 50 சதவீத சிறப்பு கட்டண சலுகை

எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் 50 சதவீத சிறப்பு கட்டண சலுகை

எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் 50 சதவீத சிறப்பு கட்டண சலுகை


ADDED : ஆக 15, 2026 07:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2026 07:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கருவடிக்குப்பம், இ.சி.ஆரில் உள்ள எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில், 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 5ம் தேதி வரை உடல் பருமன் தொடர்பான பரிசோதனைகளுக்கு 50 சதவீத சிறப்பு கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து எம்.வி.ஆர். மருத்துவ மையத்தின் நிறுவனர் வித்யா கூறியதாவது:

இன்றைய காலத்தில் உலகம் முழுதும் வேகமாக அதிகரித்து வரும் முக்கிய உடல்நலப் பிரச்னைகளில் உடல் பருமனும் ஒன்று. உடல் பருமன் என்பது மரபணு, உணவுமுறை, வாழ்க்கை முறை, துாக்கம், உடலில் பசியையும், எடையையும் கட்டுப்படுத்தும் ஹார்மோன் செயல்பாடுகள், சில மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்னையாகும்.

உடல் பருமன், எடை மற்றும் உயரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் அளவு மட்டுமல்லாமல், இடுப்புச் சுற்றளவு, வயிற்று கொழுப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, கல்லீரல் நிலை, துாக்கத்தில் குறட்டை மற்றும் மூச்சுத் திணறல், உடல் இயக்கம் மற்றும் உடல் தகுதி போன்றவற்றையும் மதிப்பிடப்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் உடல் பருமன் ஏற்படுவதற்கான காரணங்களும், உடலின் தேவைகளும் வேறுபடும். தற்போதைய சிகிச்சை முறையில் உணவுமுறை, உடற்பயிற்சி, துாக்கம், மனநலம், உடல் எடையை அதிகரிக்கக்கூடிய மருந்துகள், உடலில் உள்ள பிற நோய்களுடன் ஒருங்கிணைந்து மதிப்பிடப்படுகிறது.

உடல் பருமன் பல ஆண்டுகள் எந்தவிதமான வெளிப்படையான அறிகுறிகளும் இல்லாமல் இருந்து, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு கல்லீரல், மூட்டு வலி, துாக்கத்தில் மூச்சுத்திணறல் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கலாம்.

இந்நிலையில், நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடந்த 5ம் தேதி முதல் வரும் செப்டம்பர் 5ம் தேதி வரை, எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் உடல் பருமன் தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசோதனைகளுக்கு 50 சதவீத சிறப்பு கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. உடல் பருமனுக்கான அடிப்படை பரிசோதனைகள் ரூ.900 முதல் மேற்கொள்ளப்படுகின்றன.

உடல் பருமன் மற்றும் வாழ்க்கை முறை மாற்ற சிறப்பு திட்டத்தில் சேருபவர்களுக்கு, தேவைக்கேற்ப தனிப்பட்ட உணவுத் திட்டம், உடற்பயிற்சி வழிகாட்டுதல் மற்றும் யோகா பயிற்சி தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us