/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளியில் 5,000 லிட்டர் குடிநீர் தொட்டி முன்னாள் மாணவர்கள் அசத்தல்
/
பள்ளியில் 5,000 லிட்டர் குடிநீர் தொட்டி முன்னாள் மாணவர்கள் அசத்தல்
பள்ளியில் 5,000 லிட்டர் குடிநீர் தொட்டி முன்னாள் மாணவர்கள் அசத்தல்
பள்ளியில் 5,000 லிட்டர் குடிநீர் தொட்டி முன்னாள் மாணவர்கள் அசத்தல்
ADDED : ஜூலை 04, 2024 03:33 AM

நெட்டப்பாக்கம், : நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் மின்சார மோட்டார் அறை மற்றும் குடிநீர் தொட்டியை, முன்னாள் மாணவர்கள் அமைத்து தந்துள்ளனர்.
நெட்டப்பாக்கத்தில் அமைந்துள்ள கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1978- மற்றும் 1979-80ம் ஆண்டுகளில் படித்த மாணவர்கள் இணைந்து, பள்ளியில் குடிநீர் சுத்தி கரிப்பு இயந்திரம், மாணவர்களுக்கு உணவு அருந்தும் மேடை, சில்வரில் மாணவர்களுக்கு கை அலம்பும் தொட்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து கொடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தற்போது மின்சார மோட்டர் அறை, பள்ளிக்கு புதியதாக 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் தெய்வநாயகம் தலைமை தாங்கினார்.
நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன், சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் ஆகியோர் புதிய மின்சார மோட்டார் அறை மற்றும் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தனர்.
விழாவில் முன்னாள் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, பள்ளி துணை முதல்வர் தில்லைக்கண்ணு காமராஜ் செய்திருந்தார்.