/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் 56 சதவீதம் பேர் பங்கேற்பு
/
தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் 56 சதவீதம் பேர் பங்கேற்பு
தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் 56 சதவீதம் பேர் பங்கேற்பு
தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் 56 சதவீதம் பேர் பங்கேற்பு
ADDED : செப் 02, 2024 01:12 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் இரு மையங்களில் நடந்த தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுகளில், 56 சதவீதத்தினர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில், 2024ம் ஆண்டுக்கான, ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது.
இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் உள்ள பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரியில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு நடந்தது. முதல் பிரிவு காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரையிலும், 2 வது பிரிவு மதியம் 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரையிலும், 3,வது பிரிவு மாலை 3:00 மணிக்கு துவங்கி, மாலை 5:00 மணி வரை நடந்தது.
இந்த தேர்விற்கு, 111 பேர் விண்ணப்பத்திருந்தனர். இதில், 54 பேர் மட்டும் கலந்து கொண்டு, தேர்வு எழுதினர். 56 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இதேபோல, லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றம் கடற்படை அகாடமி தேர்வு நடந்தது.
இந்த தேர்வு எழுத, 130 பேர் விண்ணப்பத்திருந்தனர். இதில், 81 பேர் கலந்து கொண்டு, தேர்வு எழுதினர். 49 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இந்த இரு தேர்வுகளையும் எழுத, மொத்தம், 241 பேர் விண்ணப்பத்திருந்தனர்.
ஆனால், 135 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். 106 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. அதாவது, 56.02 சதவீதத்தினர் மட்டுமே, தேர்வெழுதி உள்ளனர். மீதமுள்ள, 43.98 சதவீதத்தினர் தேர்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு, ஹால் டிக்கெட் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை சரி பார்க்கப்பட்ட பிறகே, தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், மொபைல் போன் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களுக்கும், தடை விதிக்கப்பட்டது. தேர்வு மையங்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தேர்வர்களின் வசதிக்காக, நேற்று காலை புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு செல்ல அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல, தேர்வு முடிந்த பிறகும், மையங்களில் இருந்து பஸ் நிலையத்திற்கு, தேர்வர்கள் சிறப்பு பஸ்களில் சென்றனர்.