தி.மு.க.,வுக்கு எதிராக போட்டியிட்ட 6 காங்., வேட்பாளர்கள் டெபாசிட் பறிபோனது
தி.மு.க.,வுக்கு எதிராக போட்டியிட்ட 6 காங்., வேட்பாளர்கள் டெபாசிட் பறிபோனது
ADDED : மே 05, 2026 05:41 PM
புதுச்சேரி: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு எதிராக போட்டியிட்ட 6 காங்., வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்துள்ளனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணி சார்பில் தி.மு.க., 12 தொகுதிகளிலும், காங்., 16 தொகுதிகளிலும், வி.சி.க., கம்யூ., தலா 1 தொகுதியில் போட்டியிட்டது. இந்நிலையில் தி.மு.க., வி.சி.க., போட்டியிட்ட காலாப்பட்டு, மங்கலம், உழவர்கரை, ராஜ்பவன், திருபுவனை, காரைக்கால் தெற்கு ஆகிய 6 தொகுதிகளில் காங்., வேட்பாளர்களை களமிறங்கினர்.
அந்த வேட்பாளர்களுக்கு காங்., கட்சியினர் ஆதரவு அளிக்க கூடாது என மாநில தலைவர் வைத்திலிங்கம் உத்ரவிட்டார். ஆனால் அதை பொருட்படுத்தாமல், காங்., கட்சியினர் தி.மு.க.,வுக்கு எதிராக பணியாற்றினர். இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையில், தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிட்ட 6 காங்., வேட்டபாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
அதில், காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட்ட ஷாஜகான் 1,990 ஓட்டுகளும், மங்கலத்தில் ரகுபதி 1,251, உழவர்கரையில் சிவசங்கர் 2,270, ராஜ்பவனில் குமரன் 1,538, திருபுவனையில் வேலு 3,561, காரைக்கால் தெற்கில் சக்திவேல் 1,251 குறைந்த எண்ணிக்கையில் ஒட்டுகளை பெற்றனர்.
இதில், காங்., போட்டி வேட்பாளரால் திருபுவனை தொகுதியில் தி.மு.க., மிக குறைந்த ஓட்டுகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தது. காமராஜ் நகர் தொகுதியில் தே.ஜ., கூட்டணியில் சார்பில் போட்டியிட்ட ல.ஜ.க., வேட்பாளர் சார்லஸ் மார்டின் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்., வேட்பாளர் தேவதாசை விட 10,205 ஓட்டுகள் கூடுதலாகவும், மொத்தம் 16,592 ஓட்டுகள் பெற்றது குறிப்பிடதக்கது. மேலும், மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் ராஜ்பவன் தொகுதி தி.மு.க., வேட்பாளர் விக்னேஷ் கண்ணன் வெற்றிப்பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கத்தை விட 287 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.
காலாப்பட்டு தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் செந்தில் (எ) ரமேஷ் 447 ஓட்டுகளும், இந்திரா நகர் தொகுதியில் என்.ஆர்., காங்., வேட்பாளர் ஆறுமுகம் 584 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளனர்.
