/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சூறைக்காற்றுடன் மழை 6 மணி நேரம் 'பவர் கட்'
/
சூறைக்காற்றுடன் மழை 6 மணி நேரம் 'பவர் கட்'
ADDED : மே 09, 2024 04:32 AM
நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுாரில் நேற்று அதிகாலை சூரைக்காற்றுடன் கனமழை பெய்ததாதல் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக சுட்டெரித்த வெயிலால் மக்கள் வாடி வதைந்து வந்தனர். இந்நிலையில் நெட்டபாக்கம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
குறிப்பாக பண்டசோழநல்லுார் கிராமத்தில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் சூரைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் காலை 5.45 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
காலை 11.30 மணியளவில் மீண்டும் மின் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் வேலைக்கு செல்லும் அரசு ஊழியர்கள், கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்தனர்.