/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொள்ளை அடிக்க திட்டம் கத்தியுடன் 6 பேர் கைது
/
கொள்ளை அடிக்க திட்டம் கத்தியுடன் 6 பேர் கைது
ADDED : ஜூன் 25, 2024 04:45 AM

அரியாங்குப்பம் : கொள்ளை அடிக்க திட்டம் தீட்டிய கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்து, கத்தி, பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தவளக்குப்பம் பகுதியில் பைக் திருட்டு, வீடு புகுந்து திருட்டு, பொது இடத்தில் குடித்துவிட்டு ரகளை செய்வது, போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், தானம்பாளையம் கல்லுாரி சாலையில் ஒரு கும்பல் கொள்ளை அடிக்க திட்டம் போட்டு, இருப்பதாக, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு தவளக்குப்பம் குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதையடுத்து, இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமலையில், சப் இன்ஸ்பெக்டர்கள் சண்முக சத்தியா, கதிரேசன், குற்றப்பிரிவு ஏட்டு வசந்த் மற்றும் போலீசார் அந்த பகுதியில் பதுங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
மேலும், 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தவளக்குப்பம் பகுதியில் உள்ள வீடுகள். கடைகளில் இரவு நேரங்களில் புகுந்து கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியதை அவர்கள் ஒப்பு கொண்டனர். மேலும், அவர்கள் , புதுச்சேரி திப்ராயப்பேட்டையை சேர்ந்த தினேஷ், 28; நியூ சாரம் சுரேஷ், 30; தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் அனந்தராமன், 22; அபிேஷகப்பாக்கம் ஜெயபிரதன், 19; உறுவையாறு பகுதியை சேர்ந்த வித்யாசாகர், புதுச்சேரி சுப்பையா நகரை சேர்ந்த மணியழகன், 22; என தெரிய வந்தது.
இந்த 6 பேர் மீது, தவளக்குப்பம், புதுச்சேரியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் கஞ்சா, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து 2 கத்தி, 3 பைக்குகள், 6 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து,கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.