ADDED : ஜூன் 28, 2026 07:03 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் மோசடி கும்பலிடம் 6 பேர் ரூ. 1.60 லட்சம் இழந்துள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர், சமூக வலைதளத்தில் குறைந்த விலைக்கு இனோவா கிரிஸ்டா காரை விற்பனை தொடர்பான விளம்பரத்தை பார்த்து, அவற்றை ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, அவரை தொடர்பு கொண்ட மர்மநபர் முன்பணம் செலுத்தும்படி தெரிவித்துள்ளார். அதைநம்பி மர்மநபருக்கு ரூ.63 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஆனால், ஆர்டர் செய்த கார் வீட்டிற்கு வரவில்லை. அதன்பின் மர்ம நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
திலாஸ்பேட்டையை சேர்ந்த பெண் இன்ஸ்டாகிராமில் ஆடை விற்பனை தொடர்பான விளம்பரத்தை பார்த்து, அவற்றை ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணை தொடர்பு கொண்ட மர்மநபர் முன்பணம் செலுத்தும்படி தெரிவித்துள்ளார். அதைநம்பி மர்மநபருக்கு ரூ. 43 ஆயிரத்து 140 செலுத்தி ஏமாந்துள்ளார்.
இதேபோல், அண்ணா சாலையை சேர்ந்தவர் 32 ஆயிரத்து 415, முருங்கப்பாக்கத்தை சேர்ந்த பெண் 2 ஆயிரத்து 949, முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் 10 ஆயிரம், தொண்டமாநத்தத்தை சேர்ந்தவர் 8 ஆயிரத்து 800 என 6 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 1 லட்சத்து 60 ஆயிரத்து 304 இழந்துள்ளனர்.
புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
