/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
6 பேரிடம் ரூ. 7.36 லட்சம் மோசடி
/
6 பேரிடம் ரூ. 7.36 லட்சம் மோசடி
ADDED : செப் 13, 2024 06:33 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 6 பேரிடம் 7.36 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆதித்யா. இவரை தொடர்பு கொண்ட நபர், போலீஸ் அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டார். தொடர்ந்து, பேசிய அவர், உங்கள் மீது சைபர் கிரைம் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என, கூறினார். அதற்கு பயந்து அவர் 5.60 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
அதே போல, பெரியக்காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தேசிங்கு. இவர் மர்ம நபரிடம் 75 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். வில்லியனுார் பகுதியை சேர்ந்தவர் தெய்வகுமார் என்பவரை தொடர்பு கொண்ட நபர் குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறினார். கடன் பெற செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும் என, கூறியதால், 40 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
அதே போல், புதுச்சேரி பகுதியை சேர்ந்த சிவேஸ்வரன், 28, ஆயிரம், முத்துகுமார், 17, ஆயிரம், ஸ்ரீதர் 16 ஆயிரம் ரூபாய் என மர்ம கும்பலிடம் பணம் அனுப்பி ஏமாந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.