/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாத்தனுார் அணைக்கட்டில் இருந்து புதுச்சேரிக்கு 600 எம்.எல்.டி., தண்ணீர் மத்திய நீர் ஆணைய சேர்மனிடம் கோரிக்கை
/
சாத்தனுார் அணைக்கட்டில் இருந்து புதுச்சேரிக்கு 600 எம்.எல்.டி., தண்ணீர் மத்திய நீர் ஆணைய சேர்மனிடம் கோரிக்கை
சாத்தனுார் அணைக்கட்டில் இருந்து புதுச்சேரிக்கு 600 எம்.எல்.டி., தண்ணீர் மத்திய நீர் ஆணைய சேர்மனிடம் கோரிக்கை
சாத்தனுார் அணைக்கட்டில் இருந்து புதுச்சேரிக்கு 600 எம்.எல்.டி., தண்ணீர் மத்திய நீர் ஆணைய சேர்மனிடம் கோரிக்கை
ADDED : ஜூலை 13, 2024 05:55 AM

புதுச்சேரி: பெண்ணையாற்றின் ஒப்பந்தத்தின்படி, சாத்தனுார் அணைக்கட்டில் இருந்து புதுச்சேரிக்கு 600 எம்.எல்.டி., தண்ணீரை பைப் லைன் மூலம் திறந்துவிட தமிழக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என, மத்திய நீர் ஆணைய சேர்மனிடம் அசோக்பாபு எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார்.
அவர் டில்லியில் மத்திய நீர் ஆணைய சேர்மன் குஷ்விந்தர் வோஹ்ராவிடம் அளித்துள்ள மனு:
கடலோர நகரமான புதுச்சேரி, நிலத்தடி நீரில் அதிகப்படியான உப்புத்தன்மையால் குடிநீர் மற்றும் விவசாயம் ஆகிய இரண்டிற்கும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. பெண்ணையாற்றில் இருந்து பருவமழையின் போது பங்காரு வாய்க்கால் மூலம் நீர் பெற்று ஏரிகளில் சேமிக்கப்பட்டு பருவகால பயிர்களுக்கு பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. புதுச்சேரி பெண்ணையாற்றின் முனையில் அமைந்துள்ளது.
பெண்ணையாற்றின் தண்ணீர் பங்கீட்டிற்காக 1910ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி ஆங்கிலேய அரசும் பிரெஞ்சு அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தம் கடைசியில் 2007ல் ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் புதுச்சேரி அரசுக்கும் இடையில் புதுப்பிக்கப்பட்டது. இந்த தண்ணீரை நம்பி புதுச்சேரி மாநிலத்தில் 4,776 ஏக்கர் நிலம், தமிழ்நாட்டில் 1,275.11 ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஒப்பந்தபடி சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து 9 மாதத்திற்கு தமிழக, புதுச்சேரி ஆயக்கட்டு பகுதிகள் தண்ணீர் பெற வேண்டும்.
ஆனால் புதுச்சேரி பகுதிக்கு 2 மாதம் வரை தான் தண்ணீர் கிடைக்கிறது. அதுவும் பருவமழை பெய்யும் நவம்பர், டிசம்பரில் தான் பங்காரு வாய்க்கால் வழியாக சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் பெறுகிறது.
சொர்ணாவூர் அணைக்கட்டு பராமரிப்பிற்காக அண்மையில் 46.50 கோடி ரூபாய் தமிழக பொதுப்பணித் துறை கேட்டது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரிக்கு விவசாயத்திற்கு 270 எம்.எல்.டி., குடிநீருக்கு 330 எம்.எல்.டி., என 600 எம்.எல்.டி., தேவைபடுகிறது.
எனவே ஒரு நாளைக்கு பெண்ணணையாற்று ஒப்பந்தப்படி, புதுச்சேரி தினமும் 600 எம்.எல்.டி., தண்ணீரை 9 மாதத்திற்கு சாத்தனுார் அணைக்கட்டில் பைப் லைன் மூலம் திறந்து விட தமிழக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.