/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசில் 69 பேருக்கு பதவி உயர்வு
/
போலீசில் 69 பேருக்கு பதவி உயர்வு
ADDED : மார் 06, 2025 03:06 AM
புதுச்சேரி : புதுச்சேரி, 10, 15, 25 ஆண்டுகள் பணி முடித்த போலீசாருக்கு, தலைமை காவலர், உதவி சப் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி போலீசில் 10, 15 மற்றும் 25 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை தலைமை காவலர், உதவி சப் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் என மூன்று கட்ட பதவி உயர்வு கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, போலீசில் 10 ஆண்டுகள் பணி முடித்த 9 போலீசாருக்கு சிறப்பு நிலை தலைமை காவலர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் பணி முடித்த தலைமை காவலர்கள் 8 பேருக்கு சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் பதவியும், 25 ஆண்டுகள் பணி முடித்த 45 பேருக்கு, சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஸ் வெளியிட்டுள்ளார்.