sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் 7 விரைவு நீதிமன்றங்கள் முதல்வர் ரங்கசாமி தகவல்

/

புதுச்சேரியில் 7 விரைவு நீதிமன்றங்கள் முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரியில் 7 விரைவு நீதிமன்றங்கள் முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரியில் 7 விரைவு நீதிமன்றங்கள் முதல்வர் ரங்கசாமி தகவல்


ADDED : ஜூலை 02, 2024 05:05 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் விரை வான நீதி கிடைக்க 7 விரைவு நீதிமன்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

மத்திய அரசு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதிநிய ஆகிய புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

இச்சட்டம் புதுச்சேரியில் அமல்படுத்தும் விழா, கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி கருத்தரங்கு கூடத்தில் நேற்று நடந்தது.

முதல்வர் ரங்கசாமி குற்றவியல் சட்டங்கள் குறித்த கையேட்டை வெளியிட்டு பேசியதாவது:

காலம் கடந்து கிடைக்கும் நீதி சரியாக இருக்காது. கொலை, பாலியல் பாலத்காரம் உள்ளிட்ட பெரிய குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும். தவறு செய்பவர்களுக்கு ஒரு கால கெடுவுக்குள் தண்டனை கிடைக்க வேண்டும்.

கொலை குற்றங்கள் கூட மூன்று ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இழுத்து கொண்டிருப்பதை பார்க்கலாம். கொலை குற்றத்தில் ஈடுப்படுவர்களுக்கு விரைவாக தண்டனை கிடைக்க வேண்டும்.பெரிய குற்ற வழக்கு களை ஒரு காலகெடுவுக் குள் முடிக்க வில்லைஎன்றால் நீர்த்து போய்விடும். குற்ற வழக்குகளை ஒரு காலகெடுவுக்குள் முடிக்க புதிய சட்டத்தில் வழிவகை உள்ளது.

புதிய சட்டங்கள் பொதுமக்களுக்கும், குற்றம் செய்ய துடிக்கும் கும்பலுக்கும் கட்டாய தெரிய வேண்டும். இந்த சட்டத்துறை, போலீஸ் இணைந்து தமிழில் விளம்பரப்படுத்த வேண்டும். தண்டனைகடுமையாக இருக்கிறது என, பயம் வந்தால் தான் குற்றங்களை தடுக்க முடியும்.

சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டுமானால் கடுமையான சட்டம் தேவை. இச்சட்டம் குறித்து வழக்கறிஞர், போலீசாருக்கு தெரிவதுபோல், பொது மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

புதிய தொழில்நுட்பங்கள் மூலமாக ஏற்படும் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும். போலீஸ், நீதிமன்றங்கள் இணைந்து செயல்பட்டால் மக்களுக்கு விரைவான நீதி கிடைக்கும்.

சிறைக்கு சென்றால் எளிதில் வெளியே வர முடியாது என்றால், குற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வராது. மக்கள் பாதுகாப்பாக அச்சமில்லாமல் வாழ்வதற்குரிய நிலையை உருவாக்கஇந்த புதிய சட்டங்களின் நோக்கம்.

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும் என்பது எண்ணம். சுற்றுலா பயணிகள் அச்சமின்றி வந்து செல்வதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

விரைவான தீர்ப்பு வர வேண்டும் என்பதற்கான 7 விரைவு நீதிமன்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கான நீதிபதிகள், அலுவல் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போலீஸ் துறை, சட்டத்துறை, நீதிமன்றங்கள் வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக பல காலி பணியிடங்களை அரசு நிரப்பி வருகிறது. மக்கள் அச்சமின்றி வாழ்கின்ற நிலையை உருவாக்கும் புதிய சட்டங்களை அமல்படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய அரசுக்கு நன்றிதெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய குற்றவியல் சட்டங்களை தமிழில் கையேடாக தயாரித்து மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்' என்றார்.






      Dinamalar
      Follow us