ADDED : மே 10, 2026 10:51 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் மது குடித்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் தொடர்ந்து மது குடித்து வருவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, அங்கு ரோந்து சென்ற போலீசார், மைதானத்தில் மது குடித்தவர்களை பிடித்து விசாரித்தனர்.
அதில், ரெட்டியார்பாளைத்தை சேர்ந்த பாலாஜி, 30; தட்டாஞ்சாவடியை சேர்ந்த சசிகுமார், 26, உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இப்பகுதியில் மது குடிப்பதை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
