ADDED : மே 17, 2026 07:30 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் 7 பேர் மோசடி கும்பலிடம் 2 லட்சம் ரூபாய் இழந்துள்ளனர்.
புதுச்சேரி, மூலக்குளத்தை சேர்ந்த பெண்ணை, தொடர்பு கொண்ட மர்மநபர், தங்களுடைய கே.வி.பி., வங்கியின் ரிவார்டு பாயிண்டை பணமாக மாற்றி தருவதாக கூறியுள்ளார். அது தொடர்பான மொபைல் செயலியை குறுச்செய்தியாக அனுப்பியுள்ளார்.
அதை உண்மை என நம்பியவர், அதனை மொபைலில் பதிவிறக்கம் செய்து, தனது வங்கி கணக்கு விவரங்களை பதிவிட்டுள்ளார். அதன் பின், அவரது வங்கி கணக்கில் இருந்து 52 ஆயிரம் ரூபாயை மர்மநபர்கள் எடுத்துள்ளனர்.
இதேபோல், கோவிந்தசாலையை சேர்ந்தவர் 10 ஆயிரத்து 200, திருக்கனுாரைச் சேர்ந்தவர் 45 ஆயிரத்து 800, நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் 33 ஆயிரம், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் 14 ஆயிரம், வில்லியனுாரை சேர்ந்தவர் 12 ஆயிரத்து 960, வேல்ராம்பட்டைச் சேர்ந்த பெண் 40 ஆயிரம் என 7 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 960 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
