ADDED : ஜூன் 07, 2026 06:20 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் 7 பேரிடம் ரூ.2.85 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
முதலியார்பேட்டையை சேர்ந்த நபர், இன்ஸ்டாகிராம் மூலம் கோயம்புத்துாரில் இயங்கி வரும் ஒரு தனியார் வேலை வாய்ப்பு ஆலோசனை மையத்தை தொடர்பு கொண்டார். அவரிடம் பேசிய மர்ம நபர்கள், வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பிய அவர் பணி நியமன ஆணைக்காக 1 லட்சத்து 23 ஆயிரத்து 600 ரூபாயை அனுப்பினார். பணத்தை பெற்றபின் அந்த கன்சல்டன்சி தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின் அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதேபோல், அரியாங்குப்பத்தை சேர்ந்த நபரிடம் 99 ஆயிரம், திருக்கனுாரை சேர்ந்த நபர் 29 ஆயிரம், கோர்காடு சேர்ந்த பெண் 22 ஆயிரம், முருங்கப்பாக்கத்தை சேர்ந்த நபர் 5 ஆயிரம், சாரத்தை சேர்ந்த நபர் 4 ஆயிரத்து 20, டி.நகரை சேர்ந்த நபர் 2 ஆயிரத்து 500, என 7 பேர் மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 120 ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி நபர்களை தேடி வருகின்றனர்.
