ADDED : மே 30, 2026 07:31 PM
மந்தாரக்குப்பம்: காட்டுமன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார், 67; இவர் தனது மனைவியுடன் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் நேற்று நெய்வேலியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். சீர்காழி பகுதியை சேர்ந்த டிரைவர் இளவரசன், 42; காரை ஒட்டி சென்றார். கடலுார் –விருத்தாசலம் சாலை, மந்தாரக்குப்பம் கடை வீதியில் நேற்று காலை 10:30 மணியளிவில் காரில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் டீ கடையில் மோதியது. இந்த விபத்தில் டீ குடித்து கொண்டிருந்த குறவன்குப்பம் பகுதியை சேர்ந்த சுதாகர் பலத்த காயமடைந்தார். அதன் பின் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த, 8 பைக்குகள் மீது கார் மோதி சேதடைமந்தன. அப்பகுதியில்வங்கி அருகில் சென்று கொண்டிருந்த ஆனந்த், பன்னீர் ஆகியோர் மீது கார் மோதி இருவரும் காயமடைந்தனர்.
தொடர்ந்து வங்கி முன்பு உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி நின்றது. இதில் பலத்த காயமடைந்த சுதாகர் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
