ADDED : மே 13, 2026 08:21 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் 8 பேரிடம் சைபர் மோசடி கும்பல் ரூ.1.83 லட்சம் ஏமாற்றியுள்ளது.
புதுச்சேரி, கதிர்காமத்தை சேர்ந்தவரை தொடர்பு கொண்ட மர்மநபர், வங்கி அதிகாரி போல் பேசியுள்ளார். அதில், வங்கி கணக்கின் கே.ஓய்.சி.,யை புதுப்பிக்க ஏ.டி.எம்., கார்டு விவரங்கள் மற்றும் ஓ.டி.பி., எண்ணை கேட்டுள்ளார்.
இதைநம்பிய அவர், மர்மநபருக்கு அனைத்து விவரங்களையும் தெரிவித்தார். அதன்பின் அவரது வங்கியில் இருந்து 49 ஆயிரத்து 490 ரூபாயை மோசடி கும்பல் எடுத்து ஏமாற்றியுள்ளது.
இதேபோல், அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் 50 ஆயிரம், பாகூரைச் சேர்ந்தவர் 21 ஆயிரம், லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 23 ஆயிரம், குமாரப்பாளையத்தை சேர்ந்த பெண் 9 ஆயிரத்து 346, உருளையன்பேட்டையை சேர்ந்தவர் 2 ஆயிரத்து 300, லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் 24 ஆயிரத்து 600, குயவர்பாளையத்தை சேர்ந்த பெண் 4 ஆயிரம் என, 8 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 1 லட்சத்து 83 ஆயிரத்து 736 இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
