/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுண்ணாம்பாறு கரை பலப்படுத்தும் பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது
/
சுண்ணாம்பாறு கரை பலப்படுத்தும் பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது
சுண்ணாம்பாறு கரை பலப்படுத்தும் பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது
சுண்ணாம்பாறு கரை பலப்படுத்தும் பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது
ADDED : மே 07, 2024 05:46 AM

அரியாங்குப்பம் : மழை காலத்தில் வெள்ள நீர் குடியிருக்கும் பகுதியில் புகாமல் இருக்க சுண்ணாம்பாறு கரையை பலப்படுத்தும் பணி துவங்கி 85 சதவீதம் பணி முடிந்துள்ளது.
கடலுார் சாலை, இடையார்பாளையம் அருகில் என்.ஆர்., நகர் உள்ளது. இந்த பகுதியில் 105 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் குடும்பத்தினருக்கு முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் , சாலை, குடிநீர், மின்விளக்கு வசதிகள் செய்து தரப்பட்டன. குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
மழை காலத்தில், சுண்ணாம்பாற்றில் தண்ணீர் அதிகமாக செல்லும் போது, வெள்ளம் நீர் நகரில் புகுந்து சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. இதனால் குடியிருப்போர் பாதிக்கப்படுவது தொடர் கதையாக இருந்தது.
குயிடிருக்கும் பகுதிகளில் வெள்ள நீர் புகுாமல் இருக்க முதல்வர், கவர்னரிடம் அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை வைத்தனர்.
முதல்வர் ரங்கசாமி சுண்ணாம்பு ஆற்று கரையை உயர்த்தி பலப்படுத்த ரூ. 2.85 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பணி செய்ய கடந்த 2 மாதத்திற்கு முன்பு முதல்வர் துவக்கி வைத்தார்.
சுண்ணாம்பாற்று பழைய பாலம் கரையில் இருந்து குடுவையாறு வரை 700 மீட்டர் தொலைவில், 32 அடி அகலத்தில், 2.7 மீட்டர் உயரத்தில், செம்மண் கொட்டும் பணியை பொதுப்பணித்துறை மூலம் நடந்து வருகிறது.
இதுவரை, 5.5 மீட்டர் துாரம் செம்மண் கொட்டும் பணி 85 சதவீதம் முடிந்துள்ளது. லோக்சபா தேர்தல் நடந்ததால், தற்றபோது, பணி நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் கரையை பலப்படுத்தும் பணி ஜூன் மாதத்தில் துவங்க உள்ளது.