/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 8 பேரிடம் ரூ.8.90 லட்சம் மோசடி
/
புதுச்சேரியில் 8 பேரிடம் ரூ.8.90 லட்சம் மோசடி
ADDED : செப் 02, 2024 01:15 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 8 பேரிடம் ரூ. 8.90 லட்சம் மோசடி புகார் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் ஜான்ராஜ் என்பவரை மர்ம நபர்கள் வாட்ஸ் ஆப் பங்கு சந்தை குருப்பில் இணைத்து, அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளனர். இதனை நம்பிய ஜான்ராஜ் ரூ. 6.27 லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார்.
இதேபோல் காரைக்காலைச் சேர்ந்த பிரவீன்குமார் இணையதளம் மூலம் வேலைக்கு விண்ணப்பித்து அதற்காக ரூ.85 ஆயிரம் கட்டி ஏமாந்தார். காட்டேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த தமலிங்கம் ரூ. 14 ஆயிரம், புதுச்சேரியை சேர்ந்த ராகேஷ் சரவணன் ரூ. 12 ஆயிரம், மாகியைச் சேர்ந்த அப்துல் ரூ. 74 ஆயிரம், மதகடிப்பட்டு விக்னேஸ்வரன் ரூ. 13 ஆயிரம், செல்வா 15 ஆயிரம், ஆரிஸ்க் ரூ. 50 ஆயிரம் என மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.