/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளஸ் 2 தேர்வில் 92.91 சதவீத மாணவர்கள் தேர்ச்சி 29ம் இடத்திற்கு கள்ளை மாவட்டம் முன்னே றியது

ADDED : மே 07, 2024 04:41 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 92.91 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 29வது இடத்தை பிடித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 122அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 8,243 மாணவர்கள், 8955 மாணவிகள் என மொத்தம் 17 ஆயிரத்து 198 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.
இதன் முடிவுகள் நேற்று வெளியானது. அதில், 8,500 மாணவிகள், 7,478 மாணவர்கள் என மொத்தம் 15 ஆயிரத்து 978 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 92.91 ஆகும்.
23 பள்ளிகள் சென்டம்
மாவட்ட அரசு மாதிரி பள்ளி, செல்லம்பட்டு மேல்நிலை, சித்தால் மாதிரி, வெள்ளையூர் மேல்நிலை, அ.குமாரமங்கலம் மாதிரி மேல்நிலை ஆகிய 5 அரசு பள்ளிகளும், 18 தனியார் பள்ளிகள் என மொத்தம் 23 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
பாட வாரியாக தேர்ச்சி
தமிழ் பாடத்தில் 98.72 சதவீதம், ஆங்கிலத்தில் 98.38, இயற்பியல் 98.13, வேதியியல் 98.72, உயிரியல் 99.47, கணிதம் 98.31, கணினி அறிவியல் 99.73, வணிகவியல் 94.89, கணக்கு பதிவியல் 93.22, பொருளியல் 94.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முன்னேற்றம்
பிளஸ் 2 தேர்வில் கடந்தாண்டு மாநில அளவில் 30ம் இடத்தில் இருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்தாண்டு 1.85 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்று 29ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சி.இ.ஓ., பேட்டி
வரும் கல்வி ஆண்டு துவக்கத்திலேயே, பள்ளிகளில் மாணவர்கள் வருகையை அதிகப்படுத்தி, மாணவர்களுக்கு வார மற்றும் மாத தேர்வுகள் நடத்தி தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தப்படும் என சி.இ.ஓ., முருகன் கூறினார்.