தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தபால் ஓட்டு போட்ட 100 வயது மூதாட்டி

தபால் ஓட்டு போட்ட 100 வயது மூதாட்டி

தபால் ஓட்டு போட்ட 100 வயது மூதாட்டி


ADDED : ஏப் 05, 2024 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2024 05:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் லோக்சபா தேர்தலையொட்டி, தபால் ஓட்டு போட்ட நுாறு வயது மூதாட்டியை தேர்தல் அதிகாரி கந்தசாமி பாராட்டினார்.

புதுச்சேரி மாநிலத்தில், நுாறு வயதுக்கு மேற்பட்டோர் மொத்தம் 97 பேர் உள்ளனர். இதில், புதுச்சேரியில், 85, காரைக்காலில், 8 , ஏனாமில் 1 உள்ளனர். லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. அதையடுத்து, புதுச்சேரி மாநிலத்தில், 100 சதவீதம் ஓட்டுப் பதிவு நடப்பதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது.

இந்நிலையில், உப்பளம் தொகுதிக்குட்பட்ட எல்லையம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலை. இவருக்கு 100 வயது ஆகிறது. தேர்தலையொட்டி, இவர் தனது ஜனநாயக கடமை தவறாமல் தனது தபால் ஓட்டை நேற்று பதிவு செய்தார்.

நுாறு வயது ஆனாலும், தபால் ஓட்டை பதிவு செய்த மூதாட்டியை தேர்தல் அதிகாரி கந்தசாமி பாராட்டினார். அவருக்கு சால்வை அணிவித்து, மரியாதை செலுத்தினார். தேர்தல் சிறப்பு அதிகாரி செந்தில்குமார், தபால் ஓட்டுப் பதிவு செய்யும் அதிகாரி பாரதிதாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us