/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிராக்டர் மீது லாரி மோதல் 3 வயது குழந்தை பலி
/
டிராக்டர் மீது லாரி மோதல் 3 வயது குழந்தை பலி
ADDED : ஏப் 28, 2024 04:15 AM

மயிலம் : மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் 3 வயது குழந்தை இறந்தது.
மயிலம் அடுத்த எடப் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா,45; விவ சாயி. இவரது மனைவி ராதிகா,35; நேற்று காலை சிவா, செங்கல்பட்டில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு ஹாலோ பிளாக் கற்களை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.
அப்போது அவரது குழந்தைகள் மனுநீதி,6; தேவவிருதன்,3; அழுததால், அவர்களை தனது அக்கா வீட்டில் விட்டு விட்டு வருவதற்காக இரு குழந்தைகளையும் தனது டிரைவர் சீட் பக்கத்தில் உள்ள இடத்தில் அமர வைத்து அழைத்துச் சென்றார்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 7:30 மணியளவில் கூட்டேரிப்பட்டு மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கி வார சந்தை அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த ஈச்சர் லாரி டிராக்டர் மீது மோதியது.
இதில் கீழே விழுந்த குழந்தை தேவவிருதன் லாரியின் அடியில் சிக்கி படுகாயமடைந்தார். உடன் குழந்தையை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, குழந்தையை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தார்.
புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான ஈச்சர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

