/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாவரவியல் பூங்காவில் 60 ஆண்டு பழமையான மரம் விழுந்தது
/
தாவரவியல் பூங்காவில் 60 ஆண்டு பழமையான மரம் விழுந்தது
தாவரவியல் பூங்காவில் 60 ஆண்டு பழமையான மரம் விழுந்தது
தாவரவியல் பூங்காவில் 60 ஆண்டு பழமையான மரம் விழுந்தது
ADDED : ஆக 13, 2024 04:56 AM

புதுச்சேரி: பலத்த மழையின் காரணமாக தாவரவியல் பூங்காவில் இருந்த 60 ஆண்டு பழமை வாய்ந்த சிவன்தேனியா மரம் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது.
புதுச்சேரியில் உள்ள தாவரவியல் பூங்கா சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த பொழுது போக்கு இடமாக இருந்து வருகிறது.
முக்கியமாக சிறுவர்களுக்காக பிரத்தியோகமாக அமைக்கப்பட சிறுரயில் அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பூங்காவில் அடர்த்தியாக உள்ள பழைமையான மரங்கள்தான் பூங்காவின் தனித்சிறப்பு என்றால் மிகையாகாது.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி பெய்த கனமழையில், பூங்காவில் 60 ஆண்டுக்கு மேலாக இருந்த பழமை வாய்ந்த பெரிய சிவன்தேனியா மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. பூங்காவில் புதியதாக சிறுவர் உல்லாச ரயிலுக்காக, ரயில் நிறுத்தப்பட்டு பணி நடந்து வருகிறது.
அப்பகுதியில் இருந்த பஞ்சு மரம் ஒன்று கனமழை காரணமாக வேரோடு சாய்ந்ததில், புதியதாக கட்டப்பட்டு வரும் ரயில் நிறுத்தம் சேதமடைந்தது.
மேலும், பழைய ரயில் தண்டவாளமும் உடைந்து சேதமாயின. ஒரே நேரத்தில் மூன்று மரங்கள் பூங்காவில் வேரோடு சாய்ந்துள்ளது. பூங்காவின் சூழலை மீண்டும் கொண்டு வர புதிய தாக அதிகளவில் மரங்களை நட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

