/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை தடுப்புக்கட்டையில் பைக் மோதியதில் சிறுவன் பலி
/
சாலை தடுப்புக்கட்டையில் பைக் மோதியதில் சிறுவன் பலி
சாலை தடுப்புக்கட்டையில் பைக் மோதியதில் சிறுவன் பலி
சாலை தடுப்புக்கட்டையில் பைக் மோதியதில் சிறுவன் பலி
ADDED : மே 20, 2024 04:35 AM

வானூர், : ஆரோவில் அருகே பைபாஸ் சாலையில் தடுப்புக்கட்டையில் பைக் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
வானூர் அடுத்த ஆப்பிரம்பட்டு திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் ஆகாஷ், 17; அதே பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி மகன் பாலகுமார், 25; இருவரும் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து, அங்கிருந்து நள்ளிரவு 1:30 மணிக்கு, புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலை வழியாக பல்சர் பைக்கில் வீட்டிற்கு இருவரும் திரும்பிக்கொண்டிருந்தனர்.
மொரட்டாண்டி டோல்கேட் அருகே, தனியார் ஓட்டல் எதிரே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையின் சென்டர் மீடியன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும், பலத்த காயமடைந்து, ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு ஆகாஷ் உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக பாலகுமார், காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

