/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையில் நின்ற கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
/
சாலையில் நின்ற கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
ADDED : ஜூலை 10, 2024 04:14 AM

புதுச்சேரி, : ரெயின்போ நகர் அருகே சாலையில் நின்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி 45 அடி சாலை, ரெயின்போ நகரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இன்டிகோ காரில் (டி.என்.01.ஏ.கியூ.6464) நேற்று மதியம் 12:20 மணிக்கு திடீரென புகை வந்தது. அக்கம்பக்கத்தினர் மண் வீசி, தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சித்தனர். அதற்குள் கார் தீ பற்றி எரிய துவங்கியது. தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த புதுச்சேரி தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். விசாரணையில், தீ பற்றி எரிந்த கார் புதுச்சேரி கோவிந்தசாலையைச் சேர்ந்த பிரபு என்பவருக்கு சொந்தமானது என்பதும், காலை 5:30 மணிக்கு சாலையோரம் நிறுத்தி சென்றது தெரியவந்தது. தீ விபத்திற்கான காரணம் குறித்து பெரியக்கடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.