/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக் மீது மோதாமல் தவிர்க்க முயன்ற கார் எதிர்திசையில் வந்த காரில் மோதி 3 பேர் பலி
/
பைக் மீது மோதாமல் தவிர்க்க முயன்ற கார் எதிர்திசையில் வந்த காரில் மோதி 3 பேர் பலி
பைக் மீது மோதாமல் தவிர்க்க முயன்ற கார் எதிர்திசையில் வந்த காரில் மோதி 3 பேர் பலி
பைக் மீது மோதாமல் தவிர்க்க முயன்ற கார் எதிர்திசையில் வந்த காரில் மோதி 3 பேர் பலி
ADDED : ஏப் 22, 2024 04:59 AM

வானுார்: கிளியனுார் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனில் மோதி, எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் பெண் உட்பட மூவர் இறந்தனர். இரு டிரைவர் உட்பட மூவர் படுகாயமடைந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அடுத்த யாகீன்பூரை சேர்ந்தவர் சந்தராம் கிவுன் மகன் ஜடாமனிஷ்,28; ஹைதராபாத், செட்டி காதர் கூட்ரோடை சேர்ந்தவர் ராஜேஷ்வர் மகள் கீர்த்தி,27; நேற்று முன்தினம் புதுச்சேரி வந்த இருவரும் நேற்று காலை 6:00 மணிக்கு கியா காரில் ஹைதராபாத் புறப்பட்டனர். காரை, ஹைதராபாத், சுமந்தா தாய் பிளாசாவை சேர்ந்த விஜயகுமார்,38; ஓட்டினார்.
காலை 6:45 மணிக்கு புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் மொளசூர் சந்திப்பு அருகே சென்றபோது, குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க டிரைவர் விஜயகுமார் பிரேக் போட்டுள்ளார். இதில், கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனில் மோதி, எதிர் திசையில் பாய்ந்து, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற எட்டியாஸ் கார் மீது மோதியது.
அதில், கியா காரில் இருந்த கீர்த்தி, எட்டியாஸ் காரில் வந்த கிளியனுார் அடுத்த தைலாபுரத்தை சேர்ந்த பழனி,52; ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
எட்டியாஸ் காரில் வந்த பழனி மனைவி ஜெயந்தி, 45; டிரைவர் திருச்சிற்றம்பலம் கூட்ரோடை சேர்ந்த சூரியநாராயணன்,28; கியா காரில் வந்த ஜடாமனிஷ், டிரைவர் விஜயகுமார் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிளியனுார் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஜடாமனிஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விபத்தில் இறந்த பழனி, சென்னையில் பழ வியாபாரம் செய்து வந்ததும், தைலாபுரத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு வந்தபோது விபத்தில் சிக்கியது தெரியந்தது.
இந்த விபத்தால், திண்டிவனம் - புதுச்சேரி பைபாசில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. விபத்தில் சிக்கி நடுரோட்டில் நின்ற 2 கார்களையும், கிரேன் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உயிரை காத்த ஏர் பலுான்
இரு கார் டிரைவர்களும் 'சீட் பெல்ட்' அணிந்திருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் 'ஏர் பலுான்' விரிந்ததால், இருவரும் அதிக காயமின்றி, கால் முறிவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

