/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விஷவாயு தாக்கி மூவர் உயிரிழந்த விவகாரம் சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிவு

ADDED : ஜூன் 13, 2024 08:21 AM
புதுச்சேரி : ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு தாக்கி மூவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சந்தேக மரணம் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ரெட்டியார்பாளையம் புது நகர் 4வது குறுக்கு தெருவில் நேற்று முன்தினம் காலை பாதாள சாக்கடையில் உருவான விஷவாயு தாக்கி, ஆரோக்கியதாஸ் மகள் செல்வராணி, 16; அதே தெருவில் வசிக்கும் தேவராஜ் மனைவி காமாட்சி, 55; அவரது தாய் செந்தாமரை, 72; ஆகியோர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
பாக்கியலட்சுமி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக ஆரோக்கியதாஸ் மற்றும் தேவராஜன் அளித்த புகார்களின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.