/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி ஆவணங்களை கொடுத்து பணம் வாங்கிய பெண் மீது வழக்கு
/
போலி ஆவணங்களை கொடுத்து பணம் வாங்கிய பெண் மீது வழக்கு
போலி ஆவணங்களை கொடுத்து பணம் வாங்கிய பெண் மீது வழக்கு
போலி ஆவணங்களை கொடுத்து பணம் வாங்கிய பெண் மீது வழக்கு
ADDED : ஜூன் 30, 2024 11:14 PM
புதுச்சேரி : இடத்தை விற்க போலி ஆவணங்கள் கொடுத்து பணம் வாங்கிய பெண் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
உருளையன்பேட்டையை சேர்ந்தவர் சூரியநாராயணமூர்த்தி, 62; பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கருவடிகுப்பத்தை சேர்ந்த கற்பகவள்ளி என்பவர் தனக்கு சொந்தமான இடம் சண்முகாபுரத்தில் உள்ளது. அதை விற்க வேண்டும் என, சூரியநாராயண மூர்த்தியை அனுகினார். அதற்காக 15.50 லட்சம் ரூபாய் பேசி ஒப்பந்தம் செய்து, முன்பணம் 15 லட்சம் ரூபாயை, சூரியநாராயணமூர்த்தி, கற்பகவள்ளியிடம் கொடுத்தார். மீதம் 50 ஆயிரம் ரூபாயை பத்திர பதிவு செய்யும் நாளில் தருவதாக, கூறினார்.
கற்பகவள்ளி தனது இடத்தின் அனைத்து ஆவணங்களையும், சூரியநாராயண மூர்த்தியிடம் கொடுத்தார். இது தொடர்பாக, பத்திர பதிவுத்துறையை சூர்யநாராயண மூர்த்தி அனுகியபோது, அந்த ஆவணங்கள் போலியானது என தெரியவந்தது.
அதனையடுத்து, அவர் கற்பகவள்ளியிடம் கொடுத்த பணத்தை கேட்டார். ஆனால், அவர் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இது குறித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கற்பகவள்ளியிடம் விசாரித்து வருகின்றனர்.