/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
120 கண்காணிப்பு கேமராக்களுடன் ஓட்டு எண்ணும் மையம் தயாராகி வருகிறது
/
120 கண்காணிப்பு கேமராக்களுடன் ஓட்டு எண்ணும் மையம் தயாராகி வருகிறது
120 கண்காணிப்பு கேமராக்களுடன் ஓட்டு எண்ணும் மையம் தயாராகி வருகிறது
120 கண்காணிப்பு கேமராக்களுடன் ஓட்டு எண்ணும் மையம் தயாராகி வருகிறது
ADDED : மே 24, 2024 03:59 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், 120 கண்காணிப்பு கேமராக்களுடன், ஓட்டு எண்ணிக்கை மையங்கள் தயாராகி வரும் நிலையில், 4 உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கு கடந்த ஏப்.,19,ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. இதைத்தொடர்ந்து வரும், ஜூன்,4,ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கு, 4 உதவி தேர்தல் அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் நியமித்துள்ளது.
அதன்படி புதுச்சேரி சுற்றுலாத்துறை இயக்குநர் முரளிதரன், உயர்கல்வித்துறை இயக்குநர் அமன் சர்மா, தகவல் தொழில் நுட்பத்துறை இயக்குநர் சிவராஜ் மீனா, காரைக்கால் கோவில்கள் செயல் அதிகாரி அருணகிரிநாதன் ஆகிய, 4 பேர் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி பிராந்தியத்தில், 23 தொகுதியில் பதிவான ஓட்டுப்பதிவு எந்திரங்கள், லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி, மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லுாரி ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும், 10 நாட்களே உள்ளன. இந்நிலையில், இந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கைக்கு தேவையான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் அலுவலர் ஜவஹர், மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், துணை தலைமை தேர்தல் அலுவலர், துணை மாவட்ட தேர்தல் அலுவலர், நோடல் அதிகாரி, பிற துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அந்த இரு ஓட்டு எண்ணும் மையங்களிலும், 8 ஓட்டு எண்ணும் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணும் அறையில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களின் நகர்வுகளை காட்சிப்படுத்த தொலைக்காட்சி பெட்டி மற்றும் ஓட்டு எண்ணும் பணிகளை பதிவு செய்ய, வீடியோ பதிவு குழு ஆகிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
ஓட்டு எண்ணும் மையத்தில், 3 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையம், முழுவதும், 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஓட்டு எண்ணும் அறையிலும், ஒன்று வீதம், 8 ஒப்புகை சீட்டு எந்திர வாக்கு எண்ணும் மையங்கள் உட்பட மொத்தம், 93 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திர வாக்கு எண்ணும் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மகளிர் பொறியியல் கல்லுாரியில், தனியாக, 4 மேஜைகளுடன் தபால் ஓட்டு எண்ணும் அறை அமைக்கப்பட்டுள்ளது. இரு ஓட்டு எண்ணும் மையங்களிலும், 3 வேளைகளிலும், போதுமான எண்ணிக்கையிலான நிர்வாக நடுவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
ஒவ்வொரு ஓட்டு எண்ணும் மையத்திற்கும் ஒரு தீயணைப்பு கூடாரம், 24 மணி நேரமும் பணியில் இருக்கும். ஒவ்வொரு ஓட்டு எண்ணும் மையத்திலும், ஒரு மருத்துவ குழுவும், அவசர கால ஊர்தியுடன், 3 வேளைகளிலும் பணியில் இருக்கும்.
ஒரு பேக் அப் ஜெனரேட்டருடன் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள், முகவர்கள் செல்ல தேவையான வாகன நிறுத்துமிடம் கண்டறியப்பட்டுள்ளது. இரு ஓட்டு எண்ணும் மையங்களிலும் அலுவலர்கள் ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கு அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை ஆகியவற்றுடன் முகவர்கள் காத்திருப்பு அறைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.