தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தீக்குளித்த மாற்றுத்திறனாளி சிகிச்சை பலனின்றி சாவு

தீக்குளித்த மாற்றுத்திறனாளி சிகிச்சை பலனின்றி சாவு

தீக்குளித்த மாற்றுத்திறனாளி சிகிச்சை பலனின்றி சாவு


ADDED : ஏப் 02, 2024 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2024 03:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம் : விழுப்புரத்தில் தீக்குளித்த மாற்றுத் திறனாளி வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விழுப்புரம் கே.கே., ரோடு மணி நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் அப்பு என்கிற தயாநிதி, 40; மாற்றுத் திறனாளி.

இவர், அந்த பகுதியில் உள்ள கடைகளுக்குச் சென்று பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால், அங்குள்ள வியாபாரிகள் சிலர், விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.

இதனையறிந்த தயாநிதி அங்குள்ள அரிசி கடை முன் கடந்த 20ம் தேதி தகராறு செய்து, திடீரென அவர் கொண்டு வந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

பலத்த தீக்காயமடைந்த அவர், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us