sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தியேட்டர்களில் 'ஏ' படங்கள்: சிறுவர்களுக்கு 'கிடுக்கிப்பிடி'

/

தியேட்டர்களில் 'ஏ' படங்கள்: சிறுவர்களுக்கு 'கிடுக்கிப்பிடி'

தியேட்டர்களில் 'ஏ' படங்கள்: சிறுவர்களுக்கு 'கிடுக்கிப்பிடி'

தியேட்டர்களில் 'ஏ' படங்கள்: சிறுவர்களுக்கு 'கிடுக்கிப்பிடி'


ADDED : ஆக 11, 2024 05:37 AM

Google News

ADDED : ஆக 11, 2024 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி தியேட்டர்களில் 'ஏ' படங்களுக்கு சிறார்களுக்கு அனுமதி அளிப்பது இல்லை என, நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

திரைப்படங்களை மத்திய தணிக்கை குழு பார்வையிட்டு, சான்றிதழ் வழங்குகிறது. இதுபோன்ற 'ஏ' படங்களுக்கு கட்டுப்பாடு இன்றி சிறார்கள் அனுமதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது.

'ஏ' படங்களுக்கு சிறார்களை அனுமதிக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக தியேட்டர்களுக்கு அறிவுறுத்தியது.

சமீபத்தில் திரைக்கு வந்த தனுஷ் நடித்து இயக்கிய ராயன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்படம் புதுச்சேரி புராவிடன் மால் உள்ளிட்ட தியேட்டரில் திரையிடப்பட்டு வருகிறது.

இத்திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்படுவதால், 3 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்து வரும் சிறுவர்களை படம் பார்க்க அனுமதிப்பது இல்லை. அதற்கு மாற்றாக வேறு படம் அல்லது டிக்கெட்டிற்கான பணத்தை திரும்ப அளித்து திருப்பி அனுப்புகின்றனர். முரண்டு பிடித்தால் அவர்களின் ஆதார் கார்டு பரிசோதித்து அனுமதிக்கின்றனர்.

வழக்கமாக 'ஏ' சான்றிதழ் படங்கள் தியேட்டரில் திரையிட்டாலும், சிறுவர்கள் வருகிறார்களா என பெரும்பாலும் பரிசோதிப்பது கிடையாது.ஆனால் புதுச்சேரியில் 'ஏ' படங்களுக்கு சிறார்களை அனுமதிப்பதில்லை என்ற முடிவு வரவேற்கதக்கது.






      Dinamalar
      Follow us