/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உரிமம் இன்றி நாய் வளர்த்தால் ரூ.1000 அபராதம் உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
/
உரிமம் இன்றி நாய் வளர்த்தால் ரூ.1000 அபராதம் உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
உரிமம் இன்றி நாய் வளர்த்தால் ரூ.1000 அபராதம் உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
உரிமம் இன்றி நாய் வளர்த்தால் ரூ.1000 அபராதம் உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
ADDED : ஜூலை 20, 2024 04:34 AM
புதுச்சேரி: உரிமம் இன்றி நாய் வளர்த்தால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என உழவர்கரை நகராட்சி எச்சரித்துள்ளது.
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வியாபார நோக்கில் வளர்க்கும் நாய்களை சரியான முறையில் பராமரிக்காததால், நோய் வாய்ப்பட்ட பிறகு பொது இடங்களில் விடப்படும் நாய்கள், வெறிபிடித்து பொதுமக்களை அச்சுறுத்துவ தோடு கடிக்கவும் செய்வதாக நகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
எனவே, நாய் வளர்ப்பவர்கள் தங்கள் நாய்.ைளுக்கு ஆரம்ப நிலையில் இருந்து கால்நடை மருத்துவர்கள் ஆலோசனையுடன் முறையாக பராமரிக்கவேண்டும்.
உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதி வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை வரைமுறை படுத்துவதற்கு ஏதுவாக வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனையில் புதன் கிழமை தோறும் காலை 9:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை உரிமம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து உரிமையாளர்களும் தங்கள் ஆதார் மற்றும் வளர்ப்பு நாய்க்கு ஏற்கனவே வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து, வளர்ப்பு நாய்களுக்கான உரிமம் கட்டாயம் பெற்று கொள்ள வேண்டும்.
உரிமம் பெரும் வளர்ப்பு நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டு பொது பரிசோதனை செய்யப்படும். இதற்கான உரிமம் கட்டணமாக ரூ.150 மற்றும் உரிமம் புதுப்பித்தலுக்கு கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.
தெரு நாய்களுக்கு வெறி நாய் தடுப்பூசி செலுத்த விரும்பும் நாய் ஆர்வலர்கள் அவற்றை கொண்டு வந்து தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளலாம்.
செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு மேல் நகராட்சி சுகாதாரப் பிரிவு ஆய்வாளர்கள் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது, உரிமம் இல்லாமல், முறையாக பராமரிக்காமல் நாய் வளர்ப்பது தெரிந்தால் குறைந்தபட்சம் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.