/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெட்ரோல் பங்க் அருகே தீ விபத்து
/
பெட்ரோல் பங்க் அருகே தீ விபத்து
ADDED : செப் 07, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : குமாரப்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே மின்கம்பத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கனுார் அடுத்த குமாரப்பாளையம் மெயின் ரோட்டில் எச்.பி., பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த பங்க் அருகே சாலையோர சிமெண்ட் மின் கம்பத்தில் பொறுத்தப்பட்டிருந்த மின் இணைப்பு பெட்டி நேற்று காலை 10:00 மணி அளவில் திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறியது.
தகவலறிந்த திருக்கனுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பெட்ரோல் பங்க் அருகே மின்கம்பத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.