sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கல்லறையாக இருந்து காவியமாக எழுந்த பிரெஞ்சு துணை துாதரக கட்டடம்

/

கல்லறையாக இருந்து காவியமாக எழுந்த பிரெஞ்சு துணை துாதரக கட்டடம்

கல்லறையாக இருந்து காவியமாக எழுந்த பிரெஞ்சு துணை துாதரக கட்டடம்

கல்லறையாக இருந்து காவியமாக எழுந்த பிரெஞ்சு துணை துாதரக கட்டடம்


ADDED : செப் 15, 2024 07:16 AM

Google News

ADDED : செப் 15, 2024 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி கடற்கரையோரம் தலைமை செயலகத்தினையொட்டி, மரைன் வீதியில் மஞ்சளும் வெள்ளையும் கலந்த வசீகரிக்கும் வண்ணத்துடன் பிரமாண்டமான மாளிகையாக காட்சியளிக்கும் பழங்கால கட்டடத்தின் இன்றைய பெயர் பிரெஞ்சு துணை துாதரகம். புதுச்சேரி வரலாற்றில் இது தனிச்சிறப்புடைய கட்டடமாகும்.

இந்த கட்டடம் இப்போது, பிரெஞ்சு துணை துாதரக கட்டடமாக இருந்தாலும், காலஓட்டத்தில், சற்று பின்னோக்கி சென்று பார்த்தால், அப்போது கப்பூசியர் கல்லறையாகவும், அதன் பிறகு பிரெஞ்சியர் கல்லறையாக இருந்துள்ளதை கடந்த 1724-41ம் ஆண்டிற்கான புதுச்சேரிக்கான வரைப்படம் அழுத்தமாகவும், ஆதாரபூர்வமாகவும் சுட்டிகாட்டுகின்றது.

நகரின் முக்கிய பகுதியில் அமைந்திருந்தால் ஒரு கட்டடத்தில் கல்லறையாக பயன்படுத்தப்பட்டது கைவிடப்பட்டது. அதன் பிறகு அந்த இடத்தை 1751 இல் பியெர் அத்ரியன் கொஞ்ஞே என்பவர் வாங்கி பராமரித்து வந்தார். அதன் பிறகு 1777 இல் புய்ல்ழான்ஸ் த புய்ரி குடும்பத்தினர் இந்த இடத்தை வாங்கி அதில் அழகிய தோட்டம் அமைத்து, அதில் பெரிய வீட்டையும் கட்டி குடிபுகுந்தனர்.

புதுச்சேரியில் வலுவாக கால்தடம் பதித்த பிரெஞ்சியர் ஆட்சி செய்வதற்காக ஒரு அதிகார மையத்தை ஏற்படுத்த இடத்தை கடற்கரையோரம் தேடிக் கொண்டு இருந்தனர். இந்த இடம் பிரெஞ்சியர்களின் கண்களை ஈர்க்கவே, கடந்த 1840 இல் அந்த வீட்டினை வாங்கி, ஆட்சியின் அதிகார மையமாக மாற்ற முடிவு செய்தனர். 1843 இல் அந்த வீட்டில் முதல் தளத்தையும் கட்டி முழுமையான அதிகார மையமாக மாற்றி ஆட்சி செலுத்தினர்.

இந்த கட்டடம் 1840 முதல் 1843 வரை தலைமை நிர்வாக அலுவலமாகவும், 1843 முதல் 1879 வரை நிதி செயலர் அலுவலகமாகவும், 1879 முதல் 1898 வரை உள்ளாட்சி துறை இயக்குனர் அலுவலகமாகவும் , 1898 முதல் 1954 வரை பிரெஞ்சு அரசின பொது செயலமாகவும், தலைமை வழக்கறிஞர் தனி அலுவலகமாகவும் அதிகாரம் செலுத்தி, பல ஆளுமைகளை பார்த்துள்ளது.

இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்த பிறகு கடந்த 1956 முதல் பிரெஞ்சு துணை துாதரமாகமாக செயல்பட்டு வருகின்றது. பிரெஞ்சியர் ஆட்சிக்காலத்தில் பல ஆளுமைகளை பார்த்த இந்த கட்டடம் இன்றைக்கு புதுச்சேரிக்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கு பிரான்ஸ் நாட்டிற்கு இடையே கைகுலுக்கிக்கொண்டு நட்பு பாலமாக இருக்கின்றது.






      Dinamalar
      Follow us