தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவியை அடித்து கொலை செய்த கணவர்

மனைவியை அடித்து கொலை செய்த கணவர்

மனைவியை அடித்து கொலை செய்த கணவர்


ADDED : ஆக 27, 2024 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2024 05:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில், காதல் மனைவியை அடித்து கொலை செய்த கணவரை, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி திப்புராயப்பேட்டை அந்தோனியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரதீப்,27; போட்டோகிராபர். இவர், கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியை புகைப்படம் எடுக்க சென்றபோது, ஊத்தங்கரையைச் சேர்ந்த அபூர்வா,22; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து கடந்த அக். 25ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் பிதீப் வீட்டில் 4 மாதம் வசித்தனர்.

அதன்பிறகு, பெற்றோர் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி, அபூர்வாவை ஊத்தங்கரையில் உள்ள பெற்றோர் வீட்டில் விட்டு வந்தார்.

அவ்வப்போது அபூர்வா, புதுச்சேரிக்கு வந்து கணவர் பிரதீப்பை பார்த்துவிட்டு செல்வது வழக்கம். அவ்வாறு கடந்த 17ம் தேதி புதுச்சேரி வந்த அபூர்வா, பிரதீப் உடன் சின்னசுப்ராயப்பிள்ளை வீதியில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் அறை எடுத்து தங்கினார்.

இந்நிலையில் கடந்த 20ம் தேதி இரவு 9:50 மணிக்கு, ரத்த காயங்களுடன் அபூர்வாவை துாக்கி கொண்டு பிரதீப் அறையில் இருந்து வெளியே வந்தார். ஓட்டல் ஊழியர் கார்த்திக் விசாரித்தபோது, தவறி விழுந்து விட்டதாக கூறினார். பின்னர், அபூர்வாவை கெஸ்ட் ஹவுஸ் ஊழியர்கள் உதவியுடன் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

முதல்கட்ட விசாரணையில் அபூர்வா, வேறு ஆண்களுடன் பேசியதை பிரதீப் கண்டிக்கவே, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பிரதீப் சரமாரியாக தாக்கியது தெரிய வந்தது. அதனையொட்டி பெரியக்கடை போலீசார் கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிந்து பிரதீப்பை கைது செய்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபூர்வா கடந்த 24ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். அதனையொட்டி போலீசார் ஏற்கனவே பதிவு செய்த கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்தனர். மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரதீப்பை, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

போதை

மாத்திரைகளா?கெஸ்ட் அவுசில் பிரதீப், அபூர்வா தங்கியிருந்த அறையில் சில மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்து, அவை போதை மாத்திரையா என விசாரித்து வருகின்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us