/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நண்பருக்கு கத்தி குத்து வாலிபருக்கு வலை
/
நண்பருக்கு கத்தி குத்து வாலிபருக்கு வலை
ADDED : மார் 31, 2024 03:46 AM
புதுச்சேரி, : நண்பர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோத தகராறில் கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாவற்குளம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 23; கல்லுாரியில் படிக்கிறார். இடையான்சாவடி பகுதியை சேர்ந்த பிரகதீஸ்வரன், 24. நண்பர்களான இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
தமிழ்ச்செல்வன் தனது பைக்கில் இடையான்சாவடி வழியாக சென்று கொண்டிருந்தார். அங்கு நின்ற பிரகதீஸ்வரன், வழிமறித்தார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த, பிரகதீஸ்வரன் கத்தியால், தமிழ்ச்செல்வனை குத்தினார். படுகாயமடைந்த அவர் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து, பிரகதீஸ்வனை தேடி வருகின் றனர்.

