ADDED : மே 30, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தவளக்குப்பம், தானாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அழகப்பன் மகள் ரிஷிகா, 22. இவர் தவளக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்தார். இவரை கடந்த 23ம் தேதி முதல் காணவில்லை. அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வந்தனர்.
காணாமல் போன ரிஷிகா, சிங்கிரிகுடியை சேர்ந்த பெயிண்டர் அருண், 23, என்பவரை கோவிலில் திருமணம் செய்து கொண்டு, நேற்று உருளையன்பேட்டை சீனியர் எஸ்.பி., அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தார்.
எஸ்.பி., அறிவுறுத்தலின் பேரில், தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இருவரின் பெற்றோரை அழைத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, அனுப்பி வைத்தனர்.