/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்று கட்டையால் தாக்கிய கொத்தனார் கைது
/
பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்று கட்டையால் தாக்கிய கொத்தனார் கைது
பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்று கட்டையால் தாக்கிய கொத்தனார் கைது
பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்று கட்டையால் தாக்கிய கொத்தனார் கைது
ADDED : ஆக 23, 2024 06:31 AM

திருபுவனை: திருபுவனை அருகே பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்று, கட்டையால் தாக்கிய கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி எல்லையில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 55 வயது விதவைப் பெண். இவர் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள கோழி இறைச்சி கடை எதிரே துாங்கினார். நள்ளிரவில் திருபுவனை சீனிவாசா நகரை சேர்ந்த கொத்தனார் கலியமூர்த்தி, 55; என்பவர், அப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். அப்பெண் கூச்சலிட்டதால், அச்சமடைந்த கலியமூர்த்தி அருகில் கிடந்த மரக்கட்டையால் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.
தலையில் காயமடைந்த பெண்ணை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஜிப்மரில் அனுமதித்தனர். தகவலறிந்த மேற்கு பகுதி எஸ்,பி., வம்சித ரெட்டி, திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து, கலியமூர்த்தியை நேற்று கைது செய்தனர். இச்சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
கைது செய்யப்பட்ட கலியமூர்த்தியை போலீசார் நேற்று மாலை அப்பகுதிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது, அங்கிருந்த பொதுமக்கள் அவரை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கலியமூர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.