/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜிவ் சிக்னல் ப்ரிலெப்டில் மீண்டும் விதிமுறை மீறல் தடுப்புக் கட்டைகள் அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு
/
ராஜிவ் சிக்னல் ப்ரிலெப்டில் மீண்டும் விதிமுறை மீறல் தடுப்புக் கட்டைகள் அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு
ராஜிவ் சிக்னல் ப்ரிலெப்டில் மீண்டும் விதிமுறை மீறல் தடுப்புக் கட்டைகள் அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு
ராஜிவ் சிக்னல் ப்ரிலெப்டில் மீண்டும் விதிமுறை மீறல் தடுப்புக் கட்டைகள் அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு
ADDED : ஏப் 30, 2024 05:25 AM

புதுச்சேரி: ராஜிவ் சிக்னலில் முருகா தியேட்டர் ப்ரிலெப்டில், தற்காலிக பேரிகார்டுகளுக்கு பதிலாக, சிமென்ட் தடுப்புக் கட்டைகள் அமைத்தால் மட்டுமே போக்குவரத்து போலீசார் எடுத்துள்ள முயற்சிக்கும், நெரிசலுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
புதுச்சேரியில் உள்ள ராஜிவ் சிக்னலில் கிழக்கு கடற்கரை சாலை, திண்டிவனம் சாலை, வழுதாவூர் சாலை, காமராஜர் சாலை, நுாறு அடி சாலை ஆகிய பிரதானமான 5 சாலைகள் சங்கமிக்கின்றன.
இதனால், இந்த சிக்னலில் 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த சிக்னலில் போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைபிடிப்பதே இல்லை. குறிப்பாக, முருகா தியேட்டர் ப்ரிலெட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்பது தொடர் கதையாக உள்ளது.
இப்போது விழித்துக்கொண்டுள்ள போக்குவரத்து போலீசார், ராஜிவ் சிக்னலில் ப்ரிலெப்டை ஒழுங்குமுறைப்படுத்தும் பணியை துவக்கி உள்ளனர்.
முதல்கட்டமாக, முருகா தியேட்டர் அருகே, ப்ரிலெப்ட்டில் வாகனங்கள் நிற்காத வகையிலும், குறுக்கே புகுந்து செல்லாத வகையிலும் தற்காலிக பேரிகார்டுகளை வைத்து தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
போக்குவரத்து போலீசாரின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது என்றாலும், வழக்கம்போல் வாகன ஓட்டிகள் சந்துபொந்துகளை கண்டுபிடித்து, போக்குவரத்து விதிமுறை மீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ப்ரிலெப்ட் வழியாக திடீரென குறுக்கே புகுந்து சிக்னலில் நிற்கின்றனர். இதனால் போலீசாரின் முயற்சி பலன் அளிக்கவில்லை.
முருகா தியேட்டரையொட்டி உள்ள தனியார்டைல்ஸ் கடைக்கு எதிரே, அக்கடைக்குசாதகமாக இரண்டு பேரிகார்டுளுக்கு இடையே டாடா ஏஸ் வாகனம் செல்லும் அளவிற்கு பெரிய இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பேரிகார்டு போட்டு அடைக்காமல் வெறும் கயிறு கட்டியுள்ளனர்.
இந்த இடத்தில் விதிமுறை மீறல் நடக்கிறது. கோரிமேட்டில் இருந்து ப்ரிலெப்ட்டில் வரும் வாகனங்கள், குறிப்பாக பைக் ஓட்டிகள் இந்த கயிறை துாக்கிவிட்டு உள்ளே புகுந்து சிக்னலை கடக்கின்றனர். இவர்கள் திடீரென குறுக்கிடுவதால் விபத்து அபாயம் எழுந்துள்ளது.
இந்த இடத்தில் கயிறுக்குபதிலாக, பேரிகார்டுகளை போட்டு வழியை அடைத்தால் மட்டுமே, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் ப்ரிலெப்டில் புகும் வாகன ஓட்டிகளுக்கு 'செக்' வைக்க முடியும்.இப்போது ப்ரிலெப்டில் கயிற்றை துாக்கிவிட்டுசிக்னலில் புகும் வாகனங்கள், அடுத்து பேரிகார்டுகளை தள்ளிவிட்டு, பழையபடி போக்குவரத்து விதிமுறைகளை ஈடுபட தான் செய்வர்.
எனவே, இந்த இடத்தில் தற்காலிக பேரிகார்டுகளுக்கு பதிலாக சிமென்ட் தடுப்புக் கட்டைகள் போட்டு தடுத்தால்மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும்.

