தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சமூக வலைத்தளத்தில் பீர் குறித்த பதிவு வைரல்: கலால் துறை விளக்கம்

சமூக வலைத்தளத்தில் பீர் குறித்த பதிவு வைரல்: கலால் துறை விளக்கம்

சமூக வலைத்தளத்தில் பீர் குறித்த பதிவு வைரல்: கலால் துறை விளக்கம்


ADDED : ஏப் 12, 2024 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2024 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் போலி பீர் விற்பனை செய்யப்படுகிறதா என குடிமகன் கேள்வி எழுப்பும் பதிவு சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

புதுச்சேரியில் விதவிதமான சரக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தமிழகம் மட்டும் இன்றி ஏராளமான வெளிமாநில சுற்றுலா பயணிகள் மதுபானங்கள் வாங்கி சாப்பிட புதுச்சேரி வருகின்றனர்.

இந்த நிலையில், காலாப்பட்டில் உள்ள தனியார் மதுபான பாரில் 2 பீர்களை வாங்கி சாப்பிட்டதாகவும், இரண்டும் ஒரே கம்பெனி ஆனால் கியூர் ஆர் கோடு மற்றும் லேபில் மாறியுள்ளது என குடிமகன் ஒருவர் புகைப்படத்துடன் ஆடியோ குரல் பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.

கலால் துறை அதிகாரிகள் கூறுகையில்; சமூக வலைத்தளத்தில் வெளியான பீர் குறித்த தகவலில், ஒரு பீர் கர்நாடகா மாநிலத்திலும், 2வது பீர் கோவாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இரண்டும் ஒரிஜினல் பீர்கள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இரு இடங்களில் தயாரிக்கப்பட்டதால், லேபிள் மற்றும் பார் கோட் மாறியுள்ளது என தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us