/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரேக் பிடிக்காத தனியார் பஸ் கார், சென்டர் மீடியனில் மோதி விபத்து
/
பிரேக் பிடிக்காத தனியார் பஸ் கார், சென்டர் மீடியனில் மோதி விபத்து
பிரேக் பிடிக்காத தனியார் பஸ் கார், சென்டர் மீடியனில் மோதி விபத்து
பிரேக் பிடிக்காத தனியார் பஸ் கார், சென்டர் மீடியனில் மோதி விபத்து
ADDED : மே 20, 2024 05:16 AM

புதுச்சேரி : கோரிமேடு அருகே பிரேக் பிடிக்காத தனியார் பஸ், கார் சென்டர் மீடியன் மீது மோதிய விபத்தில், அதிருஷ்டவசமாக 29 பேர் உயிர் தப்பினர்.
திண்டிவனத்தில் இருந்து மயிலம் வழியாக டி.என்.63.பி.இ.2727 எண்ணுடைய எம்.ஆர்.எஸ். என்ற தனியார் பஸ் நேற்று மாலை புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை மயிலத்தைச் சேர்ந்த நாராயணன் ஓட்டி வந்தார். பஸ்சில் 27 பயணிகள் மற்றும் கண்டக்டர் இருந்தனர். பஸ் நேற்று மாலை 5:30 மணிக்கு, ஜிப்மர் மருத்துவமனை கடந்து முருகா தியேட்டர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
பஸ்சுக்கு முன்னாள் சென்ற பி.ஒய்.05.ஆர். 2863 என்ற எண்ணுடைய மாருதி எர்டிக்கா கார் போலீஸ் மைதானம் செல்லும் பாதை வழியாக வலது பக்கமாக திரும்பியது. கோரிமேட்டில் இருந்து தட்டாஞ்சாவடி நோக்கி வரும்போது சாய்தள பாதை என்பதால் பஸ் வேகமாக வந்தது. அப்போது, கார் திரும்புவதை பார்த்து பஸ் டிரைவர் பிரேக் பிடித்தார். திடீரென பிரேக் பிடிக்காததால், கார் மீது மோதாமல் இருக்க பஸ்சை வலதுபக்கமாக திருப்ப முயற்சித்தபோது, எர்டிக்கா கார் மீது மோதியதுடன், சென்டர் மீடியன் கட்டை மீது ஏறி நின்றது. காரை ஓட்டி வந்த கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த சதிஷ்க்கு லேசான காயம் ஏற்பட்டது. பஸ்சில் வந்த பயணிகள் விபத்தால் கூச்சலிட்டனர்.
பஸ்சில் வந்த பயணிகளை இறக்கி பொதுமக்கள் ஆசுவாசப்படுத்தினர். காயமடைந்த டிரைவர் சதிஷ் ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார், சென்டர் மீடியன் கட்டை மீது மோதி நின்றிருந்த தனியார் பஸ்சை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர். பஸ் பிரேக் பிடிக்காததால் சக்கரங்களில் கற்கல் வைத்து நிறுத்தினர்.
இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

