/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொல்காப்பியர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி
/
தொல்காப்பியர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி
ADDED : ஆக 22, 2024 02:07 AM

புதுச்சேரி : புதுச்சேரி தமிழ் சான்றோர் பேரவை சார்பில் தொல்காப்பியர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பேரவை நிறுவனர் நெய்தல் நாடன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன முன்னாள் பேராசிரியர் சிலம்பு செல்வராசு, ஆரோக்கியநாதன் முன்னிலை வகித்தனர். பத்மநாபன் வரவேற்றனர்.
புதுச்சேரி தன்னுரிமை கழக தலைவர் சடகோபன், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைத்துள்ள தொல்காப்பியர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தாகூர் கல்லுாரி முன்னாள் முதல்வர் இளங்கோ, தொல்காப்பியரின் இலக்கிய கோட்பாடுகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தமிழ் வளர்ச்சி சிறக சிறப்பு அலுவலர் வாசுகி, சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பூபதி பெரியசாமி, முனைவர் சுந்தரமுருகன், தமிழ்ச்சங்க பொருளாளர் அருள்செல்வம், துணை தலைவர் திருநாவுக்கரசு கருத்துரை வழங்கினர். ராமதாசு காந்திக்கு கவியருவி விருது வழங்கப்பட்டது. விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
பேராசிரியர் கோவலன், சம்பத், வாணிபிரபு, விரிவுரையாளர் சிவராமன், கலைவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.