/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஹார்டுவேர்ஸ் கடையில் திருட்டு பெண்ணாடத்தில் பரபரப்பு
/
ஹார்டுவேர்ஸ் கடையில் திருட்டு பெண்ணாடத்தில் பரபரப்பு
ஹார்டுவேர்ஸ் கடையில் திருட்டு பெண்ணாடத்தில் பரபரப்பு
ஹார்டுவேர்ஸ் கடையில் திருட்டு பெண்ணாடத்தில் பரபரப்பு
ADDED : மார் 09, 2025 03:45 AM
பெண்ணாடம் : பெண்ணாடத்தில் தகர ஓடு வாங்குவது போல் நடித்து, ஹார்டுவேர்ஸ் கடையில் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்ணாடம், கிழக்கு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன், 61. இவர் அதே பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார்.
நேற்று காலை 10:00 மணியளவில் பைக்கில் கடைக்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், உரிமையாளர் முருகனிடம் தகர ஓடு வேண்டும் என்றார்.
ஓடுகளை எடுத்துக்காட்ட முருகன் உள்ளே சென்றபோது, கல்லாவின் மேல் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பினர். இதை பார்த்த முருகன் கூச்சலிட்டார். அதற்குள் மர்ம நபர் பைக்கில் தப்பிச்சென்றார். அதிர்ச்சியடைந்த முருகன், பெண்ணாடம் போலீசில் புகார் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் குணபாலன், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர்.
கடை மற்றும் அருகி லுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.