பாகூர், வில்லியனுார் தாலுகாவில் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்
பாகூர், வில்லியனுார் தாலுகாவில் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்
ADDED : மே 20, 2024 04:41 AM
பாகூர் : பாகூர் மற்றும் வில்லியனுார் தாலுகாவில் நடைபெற உள்ள சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாமில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து குடியிருப்பு, சாதி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
இது குறித்து வில்லியனுார் தெற்கு மாவட்ட துணை கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதலின்படி, 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, குடியிருப்பு மற்றும் சாதிச் சான்றிதழ்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று 20ம் தேதி வில்லியனுார் குறுவட்டம் கூனிச்சம்பட்டு அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியிலும், நாளை 21ம் தேதி சோரப்பட்டு அரசு மேல்நிலை பள்ளியிலும், 22ம் தேதி வில்லியனுார் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 23ம் தேதி திருபுவனை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 24ம் தேதி தொண்டமாநத்தம் அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 25ம் தேதி அரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாம் நடக்கிறது.
இதேபோல், இன்று( 20ம் தேதி) பாகூர் தாலுகா பாகூர் குறுவட்டம் பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், நாளை (21ம் தேதி) கரையாம்புத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 22ம் தேதி சேலியமேடு குறுவட்டம் கிருமாம்பாக்கம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியிலும், 23ம் தேதி நெட்டப்பாக்கம் குறுவட்டம் கரியமாணிக்கம் ேஹாலி பிளவர் மேல்நிலைப்பள்ளியிலும், 24ம் தேதி ஏம்பலம் பாலாஜி மேல்நிலைப்பள்ளியிலும், 25ம் தேதி கோர்க்காடு மாரல் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியிலும் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் நடக்கிறது.
எனவே, 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து குடியிருப்பு மற்றும் சாதிச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
