/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் சிக்னல் விளக்குகள் அமைப்பு
/
மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் சிக்னல் விளக்குகள் அமைப்பு
மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் சிக்னல் விளக்குகள் அமைப்பு
மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் சிக்னல் விளக்குகள் அமைப்பு
ADDED : ஆக 10, 2024 04:37 AM

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும்
திருபுவனை: மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 'சிக்னல்' விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழி சாலை விரிவாக்கப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. விழுப்புரத்தில் தொடங்கி தமிழக பகுதியான எம்.என். குப்பம் வரை மேம்பால பணிகள் நிறைவடைந்து, வாகன போக்குவரத்து தொடங்கியுள்ளது.
இதில், கண்டமங்கலம் ரயில்வே மேம்பால பணி மட்டும் நிறைவடையாமல் உள்ளது. இந்த பணியும் வரும் செப்., 15ம் தேதிக்குள் நிறைவு பெறும் என, நகாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியை, தமிழகத்தோடு இணைக்கும் போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலைகளில் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் புதுச்சேரியின் எல்லை பகுதியான மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பை சுற்றியுள்ள 100 மேற்பட்ட கிராம மக்களுக்கு போக்குவரத்து சந்திப்பாக உள்ளது.
இது தவிர இங்குள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, பொறியியல் கல்லுாரி, கலை அறிவியல், சட்டம், நர்சிங், பி.எட்., பாலிடெக்னிக், வேளாண் கல்லுாரிகள் இங்குள்ளது. இதனால் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் வந்து செல்கின்றனர்.
தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் முக்கிய சந்திப்பாக மதகடிப்பட்டு விளங்குவதால் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் மதகடிப்பட்டில் மேம்பால பணிகள் நிறைவுற்று போக்குவரத்து தொடங்கிய நிலையில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.
இந்நிலையில் மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சிக்னல் விளக்குகள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
சிக்னல் விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்தால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

