/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆன்லைனில் விபச்சார அழகியை தேடி ரூ.10 ஆயிரத்தை இழந்த வாலிபர்
/
ஆன்லைனில் விபச்சார அழகியை தேடி ரூ.10 ஆயிரத்தை இழந்த வாலிபர்
ஆன்லைனில் விபச்சார அழகியை தேடி ரூ.10 ஆயிரத்தை இழந்த வாலிபர்
ஆன்லைனில் விபச்சார அழகியை தேடி ரூ.10 ஆயிரத்தை இழந்த வாலிபர்
ADDED : மே 28, 2024 03:36 AM
புதுச்சேரி : ஆன்லைனில் விபச்சார அழகி தேடிய சபலிஸ்ட் வாலிபரிடம் ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம நபர் அபேஸ் செய்துள்ளார்.
புதுச்சேரி கல்மண்டபத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், உல்லாசமாக இருக்க ஆன்லைனில் விபச்சார அழகிகளை தேடினார். அதில் கிடைத்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அழகிய பெண்கள் புகைப்படங்களை மர்ம நபர் அனுப்பி வைத்து ஏதேனும் ஒருவரை தேர்வு செய்ய கூறியுள்ளார்.
அதன்படி ஒரு பெண்ணை தேர்வு செய்தவுடன், அப்பெண் வர வேண்டும் என்றால் முன்பணமாக ரூ. 10 ஆயிரம் அனுப்ப வேண்டும் என கேட்டுள்ளார். மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு சபலிஸ்ட் வாலிபர் ரூ. 10 ஆயிரம் பணம் அனுப்பினார்.
பின்பு புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் பெண் காத்திருப்பதாக கூறினார். வாலிபர் அந்த ஓட்டல் அறைக்கு சென்றபோது, கதவு பூட்டப்பட்டு கிடந்தது. மர்ம நபரை தொடர்பு கொண்டபோது அவரது மொபைல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
காரைக்காலைச் சேர்ந்த பெண்ணின் முன்னாள் கணவர், பெண்ணின் அரைநிர்வாண படங்களை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
முத்தியால்பேட்டையைச் சேர்ந்த முகமது இனத்துல்லா என்ற நபர் ஆன்லைனில் குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும் என்ற மொபைல் அப்ளிக்கேஷன் பார்த்துள்ளார்.
கடன் ஏதும் வாங்கவில்லை. இருந்தும் கடன் வாங்கியதாவும், அதற்கான பணம் கட்ட வேண்டும் என சிலர் மிரட்டினர்.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
சைபர் கிரைம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.